Loading...

UyirMei Trust

UyirMei Trust is a leading educational consultant in Salem. The Trust is established in June 2022. Through UyirMei Trust, we reach out the deserving students from Economically backward and depressed parts of the country. Especially for Scheduled castes, Scheduled Tribes and Needy Students. We are providing them Educational Consulting with opportunities to not only complete their education, but also transform into confident, competent and socially responsible individuals.

Education has got the power to make a human civilized and face the challenges of life. Education is an answer to the economic imbalance of an individual. It prevails the diversity among religion, gender and cast in the society. As we looks towards the future, our youth need new skills to thrive in this brave new world. Education plays a major role in the growth and progress of a society. We believe every child has the right to receive an education. It’s a key to build an independent, successful life and gives a child a better chance to overcome the poverty.

UyirMei Trustconducts Free coaching classes for the Competitive Exams. We have clear vision on guiding the students to achieve their career goals.

மனித வாழ்க்கையில் உயர்வான எண்ணங்களும் உன்னதமான குணங்களும் நம்முள் தோன்ற வேண்டுமாயின் கல்வி என்பது அவசியம்.

வாழ்க்கை என்ற வீட்டில் கல்வி என்ற விளக்கு ஏற்றப்பட்டால் தான் நமது வாழ்வானது பிரகாசிக்கும்.

கல்வி தான் ஒரு மனிதனது அறிவுக் கண்களை திறக்கின்றது. பகுத்தறிவை உருவாக்கி அவனை வழிநடத்துகின்றது. எனவே கல்வி மிக இன்றியையாதது ஆகும்.

இதுவே பிற விலங்குகளிடம் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. இதனையே திருவள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்.

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்”

கற்றோரின் பெருமைகள்

கல்வி அறிவில் சிறந்தவர்கள் ஒரு சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுவார்கள். ஒரு செல்வந்தன் கால சூழ்நிலையால் ஏழையாகலாம் ஆனால் கல்வி அறிவுடையவன் அவ்வாறு இல்லை தனது நிலையை தான் கற்ற கல்வியால் மேலும் உயர்த்திக் கொள்வான்.

இதனை ஒளவையார் கூறுகையில்

"மன்னனும் மாசற கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத்

தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்றவிட மெல்லாம் சிறப்பு."

என்று கற்றவர்களின் பெருமையை பாடுகிறார்.

நாட்டின் அரசனையே வழிநடத்தும் அமைச்சர் சிறந்த கல்வி அறிவுடையவராகவே இருப்பர். உயர்பதவிகள், பொறுப்புக்கள் கல்வி அறிவுடையவர்களுக்கே சாத்தியமாகும். ஆகவே கல்வி ஒரு மனிதனை எப்போதும் மேன்மை அடையச் செய்கிறது.

கற்பதால் அடையும் பயன்

கல்வியால் நாம் பெறும் பயன் நமக்கு மட்டும் பயன்படுவதாய் இருக்க கூடாது. அந்தக் கல்வி இந்த சமூகத்துக்கும், நாட்டுக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும்.அதுவே நாம் கற்ற கல்வியின் முழுமையாகும்.

அறியாமையில் இருப்பவர்களுக்கு நாம் நமது கல்வி அறிவினால் உதவி செய்ய முடியும். நல்ல எண்ணங்களையும் சிறந்த செயல்களையும் செய்ய வேண்டும் அதுவே கல்வியின் பயனாகும்.

இதனை திருவள்ளுவர் “கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று வலியுறுத்துகிறார். கற்ற கல்வியின் படி நாம் ஒழுகுவதே கற்ற கல்வியின் பயனாகும்.

© 2025 UyirMei Trust. Designed By PothuMarai Solutions